நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?
ஆந்திராவில் தகாத உறவு வைத்திருந்ததற்காக ஒருவர் பட்டப்பகலில் நடு ரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் பின்னாவோலு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தி பாபு(27). இவரது மனைவிக்கும் கோனா ராஜேஷ்(22) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக சத்தி பாபுவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து அவர் ராஜேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை பிற்பகல் மூன்று மணியளவில் சோதாவரம் பகுதி சாலையில் ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்த சத்தி பாபு, அவரின் வாகனத்தை தள்ளிவிட்டு அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உள்ளார். அதன்பிறகு தனது மனைவியை கொலை செய்ய அவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். எனினும் இந்தக் கொலை தொடர்பாக சோதாவரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை தொடர்பான வீடியோ காட்சி கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் கொலை செய்தவர் சத்தி பாபு எனத் தெரியவந்தது. ஆகவே அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சத்தி பாபுவின் மனைவி வீட்டில் இல்லாததால் அவரை பாபு கொலை செய்ய காத்திருந்த நிலையில், காவல்துறையினர் பாபுவை கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் நடு ரோட்டில் நடந்த இந்தக் கொலை அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.