\
ரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்திருந்த வாலிபர்

ரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்திருந்த வாலிபர்

ரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்திருந்த வாலிபர்
Published on

ஆந்திராவில் ரயில் கடந்து செல்லும்போது தண்டவாளத்தின் நடுவே சிக்கியவர் உயிருடன் தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆந்திர பிரதேசம் அனந்தபூர் ரயில் நிலையத்திற்கு லக்னோ - எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதிலிருந்து நபர் ஒருவர் இரண்டாம் நடைமேடையில் இறங்கியுள்ளார். அவர் ஒன்றாம் நடைமேடை செல்வதற்கு மேம்பாலம் மூலம் செல்லாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். 

அப்போது நடைமேடை ஒன்றில் ஏற்கனவே நின்று கொண்டிருந்த ரயிலின் அடியில் புகுந்து செல்ல முயன்றார். ஆனால் புறப்பட தயாராக இருந்த அந்த ரயில் திடீரென நகர்ந்தது. சுதாரித்து கொண்ட அந்த நபர் தண்டவாளங்களுக்கு நடுவே படுத்து கொண்டார். அப்போது ரயில் கடந்து செல்லும் வரை சில நிமிடங்கள் அந்த நபர் ரயிலின் அடியிலேயே இருந்தார். 

பின்னர் ரயில் சென்ற பின் சிறு காயங்கள் கூட இல்லாமல் எழுந்து புறப்பட்டு சென்றார். இதைப்பார்த்த அங்கிருந்த பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com