’பாகுபலி’ பாணியில் பைக்கை தோளில் சுமந்த இளைஞர்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!

ஆற்று வெள்ளத்தின்போது தன்னுடைய பைக்கை தோளில் சுமந்து சென்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் 36 கிராமங்களை இணைக்கும் சாலை உள்ளது. முஞ்சிங்கிப்புட்டு மண்டலத்தில் உள்ள லட்சுமிபுரம் ஊராட்சிக்குட்பட்ட பர்ரிகுடா கிராமத்தில் இருந்து கடாகுடா கிராமத்துக்கு ஓடையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாதாரண நாட்களில் ஓடையில் குறைந்தளவு தண்ணீர் செல்லக்கூடிய நிலையில் மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றை கடக்க கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இந்தச் சூழலில் இளைஞர், தன்னுடைய டூவீலரை, ’பாகுபலி’ பட பாணியில் தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடக்க நினைத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தடுமாறி விழ, பைக் மட்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. பின்னர் அருகில் இருந்த கிராம மக்கள் உதவியுடன் பைக்கு மீட்கப்பட்டதோடு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com