“வெளியூர் செல்கிறீர்களா?.. வீட்டில் திருட்டு பயமா” ஆந்திர போலீஸ் புது ‘ஆப்’ அறிமுகம்

“வெளியூர் செல்கிறீர்களா?.. வீட்டில் திருட்டு பயமா” ஆந்திர போலீஸ் புது ‘ஆப்’ அறிமுகம்

“வெளியூர் செல்கிறீர்களா?.. வீட்டில் திருட்டு பயமா” ஆந்திர போலீஸ் புது ‘ஆப்’ அறிமுகம்
Published on

ஆந்திராவில் குடும்பம் முழுவதும் விடுமுறைக்கு சென்றாலும், வீட்டின் பாதுகாப்பு மற்றும் விலைமதிப்பற்ற உடைமைகளை பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் அம்மாநில அரசு இந்த ‘ஆப்’ஐ கொண்டு வந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் யாராக இருந்தாலும் இந்த செயலி மூலம், வெளியூர் சென்ற பின்னர் தங்களுடைய வீட்டை கண்காணிக்குமாறு பதிவு செய்யலாம்.

ஆந்திராவின் முதல்வரால் செப்டம்பர் 17ஆம் தேதி இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பதிவு செய்த வீட்டை போலீஸார் சில வழிகளில் கண்காணிப்பார்கள். நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் மாநகரங்களில் சிசிடிவி மற்றும் மோஷன் சென்சார்களை பதிவுசெய்த வீட்டின்முன்பு வைத்து கண்காணிப்பார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வீட்டிற்குள் யாரேனும் நுழைந்தால், உள்ளூர் போலீஸுக்கு மட்டுமல்லாமல், அந்த வீட்டின் உரிமையாளருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் பதிவு செய்தவர்களின் வீடுகளுக்கு கான்ஸ்டபிள் நியமிக்கப்படுவதுடன், தினமும் அந்த வீட்டை புகைப்படம் எடுக்கவேண்டும். அந்த புகைப்படம் வீட்டின் உரிமையாளருக்கும் அனுப்பிவைக்கப்படும். முக்கிய நபராக இருந்தால், சிசிடிவி, மோஷன் சென்சார் மற்றும் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்படும்.

இதுதவிர, முக்கிய பணியாளர், குத்தகைக்காரர், வழக்குப்பதிவு செய்தல், எஃப்.ஐ.ஆர் டவுன்லோடு செய்தல் உட்பட 85க்கும் அதிகமான வசதிகள் இந்த செயலியில் உண்டு. இதுவும் ஆந்திராவின் போலீஸ் சேவைகளில் ஒன்றாக இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com