கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டரை வெளியிட்ட ஆந்திர அரசு
கோவிட் -19 தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர்களை ஆந்திர அரசு கோரியுள்ளது.
இந்த ஏலங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 3, 2021 என மாநிலஅரசு அறிவித்துள்ளது. மேலும் ஏலத்திற்கு முந்தைய கூட்டம் மே 20 அல்லது மே 22 அன்று நடைபெற வாய்ப்புள்ளது என்று ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் தெரிவித்தார். இந்த ஏலத்தில் உலகளவில் பல தடுப்பூசி நிறுவனங்கள் கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 4 கோடி தடுப்பூசி தேவை என்றும், அதன் மதிப்பு ரூபாய் 1600 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் ஏற்கனவே கோவிட் 19 தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர்களை அறிவித்திருக்கிறது.