தமிழக மீனவர்கள் 180 பேரை சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள்: டிடிவி.தினகரன் கண்டனம்

தமிழக மீனவர்கள் 180 பேரை சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள்: டிடிவி.தினகரன் கண்டனம்

தமிழக மீனவர்கள் 180 பேரை சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள்: டிடிவி.தினகரன் கண்டனம்
Published on

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை தங்கள் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை தங்கள் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத்திற்குரியது. பிற நாட்டு கடல் எல்லைக்குள் நுழையாமல் ஆழ்கடலில் எவர் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்ற பொதுவான விதி நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ஆந்திர மீனவர்கள் இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே இதேபோன்று ஆந்திர மீனவர்கள் அத்துமீறி நடந்து கொண்டதில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு, தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். மேலும் இது போன்ற பிரச்னைகள் இனிவரும் காலங்களில் நிகழக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதி செய்வதோடு, சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என கூறியிருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com