ஆந்திரா: மருத்துவமனையில்  ஏற்பட்ட தீ விபத்து – மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

ஆந்திரா: மருத்துவமனையில்  ஏற்பட்ட தீ விபத்து – மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

ஆந்திரா: மருத்துவமனையில்  ஏற்பட்ட தீ விபத்து – மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
Published on

திருப்பதி அருகே தனியார் மருத்துவமனை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள பகத்சிங் காலனியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

.இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த கட்டடத்தின் முதலாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் தரைத்தளம் முதல் இரண்டாவது தளம் வரை தீ பரவி பயங்கரமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. ஆனால் இரண்டாவது தளத்தில் இருந்த 5 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இதைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடத்தின் ஒரு பகுதியை உடைத்து அதில் சிக்கி கொண்டிருந்த மருத்துவர் ரவிசங்கர், அவரது மகன் பரத், மகள் கார்த்திகா ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இதில், டாக்டர் அனந்தலட்சுமி உட்பட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com