ஆந்திரா | ஒரேயொரு அறுவை சிகிச்சை.... பெண்ணின் வயிற்றிலிருந்து 570 கற்களை அகற்றிய மருத்துவர்கள் குழு!

ஆந்திராவில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணின் வயிற்றில் 570 கற்கள் இருந்துள்ளன. இதைக்கண்டு அதிர்சியடைந்த மருத்துவர்கள் குழு, அறுவைசிகிச்சையின் மூலம் அக்கற்களை அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
வயிற்றில் இருந்த கற்கள்
வயிற்றில் இருந்த கற்கள்கூகுள்

ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டத்தில் அமலாபுரத்தை அடுத்து இருக்கும் தேவகுப்பத்தை சேர்ந்தவர் நரஸ்வேணி என்ற பெண். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தற்காலிகமாக வலியை குறைக்க, வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி வரவே அமலாபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், நரஸ்வேணி ஸ்கேன் ரிப்போர்ட்டின் படி அவரது வயிற்றிலும், சிறுநீர்ப்பையிலும் நூற்றுக்கணக்கான கற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து ஒரே நேரத்தில் 570 கற்களை அகற்றியுள்ளனர்.

வயிற்றில் இருந்த கற்கள்
“விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால்தான் என் கணவரை காப்பாற்ற முடியல; அதனால்..”- பெண் வைத்த கோரிக்கை

வயிற்றில் இவ்வளவு கற்கள் இருந்தது அதிர்ச்சியளித்தது என்றாலும், சரியான நேரத்தில் மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரை காப்பாற்றியுள்ளனர். தற்பொழுது அப்பெண் நலமுடன் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com