பக்தர்கள்
பக்தர்கள்pt desk

ஆந்திரா: விநாயகர் கோவிலுக்கு 6 கிலோ தங்கக் கட்டிகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்கள்...

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கிலோ தங்க பிஸ்கட்டுகளை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
Published on

செய்தியாளர்: தினேஷ் குணகலா

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் கிராமத்தில் சுயம்பு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறை வாயில் கதவுகளுக்கு தங்க முலாம் பூச முடிவு செய்யப்பட்டது. இதற்குத் தேவையான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் ஆறு கிலோ தங்கத்தை ஆந்திராவை சேர்ந்த ஐக்கா ரவி, ஸ்ரீனிவாஷ் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

தங்க பிஸ்கட்
தங்க பிஸ்கட்pt desk

இந்நிலையில், கோவில் கருவறை கதவுகளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை பொறுத்த தங்க கட்டிகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்களுக்கு சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்த கோவில் நிர்வாகத்தினர் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினர். இந்த நிகழ்வு பக்தர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com