\
மலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்

மலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்

மலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்
Published on

காவல்துறையின் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் மலைவாழ் மக்கள் இருவரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விசாகபட்டினத்தை அடுத்த வீரவரத்தில் மலை கிராம ஒன்று உள்ளது. அங்கு துப்பாக்கிகளோடு புகுந்த மாவோயிஸ்ட்டுகள், பாஸ்கர் ராவ், சிட்டிபாபு ஆகியோரை சுற்றிவளைத்தனர். காவல்துறைக்கு உளவு சொல்வதாக சந்தேகித்த மாவோயிஸ்ட்டுகள், இருவரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். 

இச்சம்பவத்திற்கு காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டுமென சுவரொட்டி ஒட்டியுள்ள மாவோயிஸ்ட்டுகள், உளவாளிகளுக்கு தகவல் சொல்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசாகப்பட்டினம் எஸ்.பி. அட்டாட பாபுஜி, மாவோயிஸ்ட்டுகள் சரணடைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com