அதிர்ந்தது அந்தமான் : 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

அதிர்ந்தது அந்தமான் : 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

அதிர்ந்தது அந்தமான் : 5.2 ரிக்டர் நிலநடுக்கம்
Published on

அந்தமான் தீவுகளில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சில இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. 

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவம் ஆகும். இதனால் அந்தமான் மக்கள் எந்நேரமும் ஒருவித பயத்துடனே தங்கள் வாழ்வை தொடர்ந்து வருகின்றனர். இதேபோன்று இந்தோனேஷியாவில் பெரிதளவு நிலநடுக்கம் ஏற்படும் சமயங்களில், அந்தமானிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் இன்று காலை நேரத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று அந்தமானில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் குறிப்பிடத்தக்க அளவு நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், இதனால் அந்தமானில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com