”ஒருத்தர் வாட்ச் .. ஒருத்தர் அடுக்குமொழி பேச்சு.. ஆனால், நமக்கு செயல்தான்”-அன்புமணி பேச்சு

”ஒருத்தர் வாட்ச் .. ஒருத்தர் அடுக்குமொழி பேச்சு.. ஆனால், நமக்கு செயல்தான்”-அன்புமணி பேச்சு
”ஒருத்தர் வாட்ச் .. ஒருத்தர் அடுக்குமொழி பேச்சு.. ஆனால், நமக்கு செயல்தான்”-அன்புமணி பேச்சு

மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் அன்புமணி இராமதாஸ், கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது, 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி 40 மக்களவை தொகுதிகளிலும் களப்பணிகளை விரைவுபடுத்துவது, உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மத்தியிலும் மாநிலத்திலும் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50 சதவீதஇட உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை பறிப்பதை தமிழக அரசும், என்.எல்.சி நிறுவனமும் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அரசு துறையில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், சோழார் பாசனத்திட்டம், தருமபுரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதற்கு ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், நீட்தேர்விலிருந்து தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு திவிரப்படுத்த வேண்டும் எனவும், சிங்களப்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக புதுச்சேரிக்கு மாநில அந்த்ஸ்த்து வழங்க வேண்டும் என புத்தாண்டு பொதுகுழு கூட்டத்தில் மொத்தமாக 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

”இளைஞர்களால் தான் பாமக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆட்சிக்கு வரவில்லை, ஆட்சி அதிகாரத்திற்கு வரவில்லை. ஆனால் ராமதாஸ் தலைமையில் மக்களுக்காக பல சாதனைகளை நிகழத்தியுள்ளோம். அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக பாமகவினை மக்கள் நேசிக்க தொடங்கியுள்ளார்கள். பாமக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக கொடுத்த குரல் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதைப்பற்றி கவலையில்லை. இன்றைய அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது. ஒரு சில கட்சிகள் உடைந்து, சிதைந்து போய் உள்ளது. சில கட்சிகள் விளம்பரங்களை தேடுகின்றார்கள். இந்நிலையில் நம்மை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதிமுக நாளாக உடைந்துள்ளது. திமுக அரசு மீது மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆகவே மக்கள் மத்தியில் பாமக முன்னேறி வருகின்றது. என்.எல்.சி தனியாருக்கு மாறப்போகின்றது. அதற்காகத்தான் நிலத்தை பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இதற்காக முதலில் குரல் கொடுத்தது பாமக தான்.பாமக நிறுவனர் ராமதாஸ் குரலால் மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சேர்ந்த போது வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று தான் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சாதிய விமர்சனம் செய்யப்பட்டது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்களும் முன்னேற வேண்டும் என்ற கொள்கையுடன் நான் இருக்கிறேன். எங்களால் ஓங்கி ஒலிக்கப்பட்ட குரலால் இன்னும் 6 மாதத்தில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் தமிழத்தில் விரைவில் கொண்டு வருவார்கள். வரும் மே.5ந்தேதி சித்தரா பெளர்ணமி நாளன்று வன்னிய சங்க மாநாடு நடத்தலாம் என்றும் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாசிடம் ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும்” என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

பேச்சியின் இடையே, அண்ணாமலையின் வாட்ச் விவகாரத்தையும், சீமானின் பேச்சு நடையையும் சுட்டிக்காட்டின் போகிற போக்கில் லேசாக விமர்சித்தான் அன்புமணி ராமதாஸ். அந்த பேச்சின் விவரம் இந்த வீடியோ தொகுப்பில்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com