மத்திய பிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. 76 வயதான ஆனந்திபென் பட்டேல், மோடி பிரதமரான பின் குஜராத் மாநில முதல்வராக 2 ஆண்டுகள் பதவி வகித்தார்.
குஜராத் ஆளுநராக உள்ள ஓ.பி.கோலி, மத்திய பிரதேச மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதவியில் இருந்தார். இந்நிலையில் முழுநேர ஆளுநராக ஆனந்திபென் நியமிக்கப்பட்டுள்ளார்