நெகிழ வைத்த தாய்ப் பாசம்... ஆனந்த் மகேந்திராவின் அன்பு பரிசு..!

நெகிழ வைத்த தாய்ப் பாசம்... ஆனந்த் மகேந்திராவின் அன்பு பரிசு..!
நெகிழ வைத்த தாய்ப் பாசம்... ஆனந்த் மகேந்திராவின் அன்பு பரிசு..!


அன்னை என்பது ஒரு அப்பழுக்கு இல்லாத உறவு; எந்தச் சொல்லாலும் விவரிக்க இயலாது அன்பு. தன் குழந்தையின் சின்னஞ் சிறு ஆசைகளுக்காக தனது ஆசைகளைமனதிற்குள் புதைத்த எத்தனையோ தாய்மார்களை நாம் கண்டிருப்போம். நமது ஆசைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தும் நாம், தாயின் இதயத்திற்குள் புதைக்கப்பட்டஆசைகளை பற்றி என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறோமா? அது எப்படி நினைத்து பார்ப்போம்..? நமது ஆசைகளை நினைத்து வருந்தி கிடப்பதற்கே நமக்கு நேரம் போதாது. அப்படி இருக்கும்போது தாயின் ஆசையை நாம் எங்கு நினைத்து பார்க்க போகிறோம். ஆனால் இங்கு ஒருவர் நினைத்து பார்த்திருக்கிறார்.

மைசூரை சேர்ந்தவர் 39 வயதான தக்‌ஷின் மூர்த்தி கிருஷ்ண குமார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது தந்தை கிருஷ்ண மூர்த்தி சில வருடங்களுக்குமுன்பு இறந்துபோக அவரது அம்மா சூடாரத்னா மைசூரில் தனியாக வசித்து வந்தார். 

தனது கணவர் இருந்த வரை, குடும்பத்திற்காக உழைத்த சூடா ரத்னா அவரது மறைவிற்கு பின்னரும் குடும்பத்திற்காகவே வாழ்ந்து வந்தார். இதனால் கணவர் இறந்தபிறகும் அவரது வாழ்கை சமையலறையிலேயே முடங்கியது. சூடா ரத்னாவிற்கு தற்போது வயது 71. தனது எதிர்காலம் பற்றி மட்டுமே யோசித்து கொண்டிருந்த கிருஷ்ணாவும் தாயை பற்றி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. 

இதனையடுத்து ஒரு முறை தனது அம்மா சோத ரத்னாவை பார்ப்பதற்கு மைசூர் சென்றார் கிருஷ்ணா. அப்போது சோதரத்னா, தனது மகன் கிருஷ்ணாவிடம்  தான் ஆன்மிகதளங்களுக்கு செல்ல விரும்புகிறேன் என்ற தனது ஆசையை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அது வரை தனது ஆசைகளை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவுக்கு, தன் அம்மா தனது வாயாலேயே தனது ஆசையை பற்றி கூறியது, ‘இவ்வளவு நாட்கள் தான் அதைபற்றி நினைக்காமல் இருந்துவிட்டோமே’என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதுடன் ஒருவிதமான குற்ற உணர்வையும் உண்டாக்கியது.

இதனால் தாயின் விருப்பப்படியே அவரை ஆன்மிக தளங்களுக்கு கூட்டிச் செல்ல முடிவெடுத்தார் கிருஷ்ணா. இதற்காக தனது வேலையை விடவும் முடிவெடுத்தார்.இதனையடுத்து இந்த நீண்ட பயணத்திற்கு 20 வருட பழமையான பஜாஜ் ஸ்கூட்டரை பயன்படுத்தவும் முடிவெடுத்தார். அதில் பயணத்திற்கு தேவையான பழங்கள், கத்தி, உடை என அனைத்தையும் தன்னுடன் இருக்குமாறும் பார்த்து கொண்டார்.

தெற்கில் உள்ள பல ஆன்மிக தளங்களுக்கு பயணத்த கிருஷ்ணாவும், தாயார்சூடாரத்னாவும் பயணத்தின்போது எந்தவொரு தனியார் விடுதியிலும் தங்க வில்லை. அதற்குமாறாக தாங்கள் செல்லும் மடங்களிலெயே தங்கினர். கேரளா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம் என பயணித்த அவர்கள் பெங்களூருலிருந்து காஷ்மீர் வரையிலான பயணத்திற்கு மட்டும் காரை பயன்படுத்திக்கொண்டனர்.

மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த தாயும் மகனும் அங்குள்ள ஆன்மிக தளங்களுக்கு சென்றுள்ளனர். இந்த பயணத்தில் சூடாரத்னாவின் நீண்ட நாள் ஆசையானகர்நாடகாவில் உள்ள ஹம்பி பயணத்தையும் சேர்த்துக் கொண்டனர். 

48,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்த இந்தப் பயணம் பற்றி கிருஷ்ணா கூறும்போது இந்தப் பயணம் தங்கள் வாழ்வின் உண்மையான நோக்கத்தை கண்டடைய வைத்து விட்டது என்றும் இப்போது மனதின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகம் பரவி இருக்கிறது என்றும் கூறினார். இந்தப் பயணத்தின்போது சக பயணி ஒருவர் இவர்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட இந்த பதிவு வைரலாகி விட்டது. 

இந்தப் பதிவு மனோஜ் குமார் என்பவரின் மூலம் மகேந்திரா கார் நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திராவை சென்றடைய கிருஷ்ணாவின் தாய்ப் பாசத்தைகண்டு நெகிழ்ந்த ஆனந்த் அவர்களின் அடுத்த பயணத்திற்கு Mahindra KUV 100 NXT ரக காரை வழங்க விரும்புவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com