“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர் 

“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர் 
“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர் 

தனது நிறுவனங்களின் கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இனி பயன்படுத்தபட மாட்டது என்று மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். 

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சில பதிவுகளை இடுவது வழக்கம். அந்தவகையில் தனது அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற கல்வி உதவித் தொகைக்கான மாணவர்கள் தேர்வு கூட்டம் தொடர்பாக ஒரு ட்வீட்டை அவர் நேற்று பதிவு செய்தார். 

அவரின் இந்த ட்வீட் பதிவிற்கு ஒரு ட்விட்டர் பயனாளர் பதில் பதிவு செய்திருந்தார். அதில், “இந்தக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக ஸ்டீல் பாட்டில்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனப் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில், “ஆமாம் பிளாஸ்டிக் பாட்டில்களை தடை செய்யவேண்டும். இந்தக் கூட்டத்தில் அதை பார்த்ததும் எங்களுக்கு சங்கடமாக இருந்தது” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் இனிமேல் தனது கார்பரேட் நிறுவனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com