ஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.!

ஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.!

ஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.!

ஒடிசா மாநிலத்தில் நந்தா பிராஸ்டி என்ற பெரியவர் மரத்தடியில் அமர்ந்தபடி பள்ளி மாணவர்களுக்கு 75 ஆண்டுகளாக ஒரு பைசாகூட வாங்காமல் பாடம் கற்பித்துவருகிறார். இந்த அரிய கல்விச்சேவையை மக்கள் மனம் நெகிழ்ந்துப் பாராட்டி வருகின்றனர்.

காவி நிற வேட்டியும் துண்டும் சிறு மணி மாலையும் அணிந்து எளிமையாகத் தோன்றும் இந்த இலவச ஆசிரியர் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இரவு நேரங்களில் கிராமத்தைச் சேர்ந்த வயதானவர்களுக்கும் அவர் பாடம் சொல்லித்தருகிறார்.

நந்தா பிராஸ்டியைப் பொறுத்தவரையில் நான்காம் வகுப்பைப் படித்துமுடிக்கும் மாணவர்களை பிறகு தொடக்கப்பள்ளிக்கு அனுப்பவேண்டும். ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதற்காக தன் முழுநேரப் பணியை விட்டு விலகினார்.

பர்தாந்தா கிராமத்தில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துவதற்கு ஓர் இடத்தை அமைப்பதற்கு அரசிடம் உதவி கேட்கலாம் என்று ஒருவர் சொன்ன ஆலோசனையை நந்தா மறுத்துவிட்டார். அவருக்கு அந்தப் பழைய மரத்தடி நிழலே போதுமானதாக இருக்கிறது.

"எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் படிக்காதவர்கள். தங்களது பெயர்களைகூட அவர்களால் எழுதமுடியாது. கைநாட்டுதான் வைப்பார்கள். அவர்களை எல்லாம் அழைத்து கையெழுத்துப் போட கற்றுக்கொடுத்தேன். பிறகு பகவத் கீதை பற்றி பாடம் நடத்தத் தொடங்கினேன். என் முதல் பேட்ச் மாணவர்களின் பேரக் குழந்தைகளுக்கு இப்போது கற்பித்துவருகிறேன்" என்கிறார் நந்தா பிராஸ்டி.

பெரியவரின் வயதை கருத்தில்கொண்டு, அமைதியாக பாடம் நடத்த ஒரு வகுப்பறையை கட்டித்தர கிராமப் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com