ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐஐடி பாம்பே மேற்கொண்டுள்ள புதிய முயற்சி!

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐஐடி பாம்பே மேற்கொண்டுள்ள புதிய முயற்சி!

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐஐடி பாம்பே மேற்கொண்டுள்ள புதிய முயற்சி!
Published on

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைவிரித்து ஆடி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ தேவைப்படும் ஆக்சிஜனை எதிர்நோக்கி உள்ள நிலையில் தேசத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஐஐடி பாம்பே அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. 

அதன்படி மிக எளிதான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நைட்ரஜன் ஜெனெரேட்டர்களை ஆக்சிஜன் ஜெனெரேட்டர்களாக மாற்றுவது தான் அவர்கள் முன்னெடுத்து வந்துள்ள முயற்சி. அதனை நிரூபித்தும் அவர்கள் காட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த முறையை பயன்படுத்தி தேசம் முழுவதும் உள்ள நைட்ரஜன் பிளான்டுகளை மருத்துவ ஆக்சிஜனாக மாற்றலாம் என ஆராய்ச்சி துறையை சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

டாட்டா கன்செல்டிங் மற்றும் ஸ்பான்டெக் பொறியாளர்கள் உதவியுடன் இதனை சாத்தியப்படுத்தி உள்ளது ஐஐடி பாம்பே. 

தேசத்தில் நிலவும் மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொண்டு இதனை போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். ‘கார்பனில் உள்ள Molecular Sievesகளை Zeolite-க்கு மாற்றுவதன் மூலம் நைட்ரஜனை ஆக்சிஜனாக மாற்றலாம்’ என இந்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com