‘ரூ70,000 ஐபோன் 11 வெறும் 24000 ரூபாய்தான்’ - பேஸ்புக் விளம்பரத்தால் ஏமாந்த பொறியாளர்!

‘ரூ70,000 ஐபோன் 11 வெறும் 24000 ரூபாய்தான்’ - பேஸ்புக் விளம்பரத்தால் ஏமாந்த பொறியாளர்!
‘ரூ70,000 ஐபோன் 11 வெறும் 24000 ரூபாய்தான்’ - பேஸ்புக் விளம்பரத்தால் ஏமாந்த பொறியாளர்!

முகநூல் விளம்பரத்தின் மூலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் ஒருவரை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹைடெக் திருடர்கள் ஏமாற்றி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொறியாளரிடம் குறைந்த விலையில் ஐபோன் 11 போன் தருவதாக சொல்லி இந்த மோசடி வேலையை திருடர்கள் மேற்கொண்டுள்ளனர். அது தொடர்பாக ஏமாற்றப்பட்ட 27 வயதான பொறியாளர் கந்தர்ப் பட்டேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

“கடந்த ஜனவரி மாதம் எனது முகநூல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் 70000 ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 11 போன் வெறும் 24000 ரூபாய்க்கு கிடைப்பதாக சொல்லப்பட்டிருந்தது. உடனடியாக நான் அதிலிருந்து எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் போனை எடுத்தவர் தன்னை ‘ராணுவ அதிகாரி’ என சொல்லி அறிமுகம் செய்து கொண்டார். 

முதலில் 4000 ரூபாய் தபால் செலவுக்காக கொடுத்தேன். தொடர்ந்து ராணுவ வழக்கத்தின் படி போனின் மொத்த தொகையில் பாதியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என சொல்லியதாகவும். அப்படி செய்தால் 24000 ரூபாய் போக மற்ற தொகை மீண்டும் எனது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என சொன்னார்கள். அதை நானும் நம்பி பணத்தை செலுத்தி விட்டேன். அப்படி ஒரு 60000 ரூபாய் வரை பணம் கொடுத்தேன். ஆனால் போன் எனக்கு வரவே இல்லை. அதனால் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து புகார் கொடுத்துள்ளேன். குற்றவாளியை துரிதமாக கண்டுபிடிக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” என தனது புகாரில் கந்தர்ப் பட்டேல் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com