\
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு

உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு

உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
Published on: 

கமலா என்று பெயர் வைத்திருக்கும் பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச "என்ட்ரி" சலுகையை அறிவித்திருக்கிறது பொழுதுபோக்கு பூங்கா ஒன்று.

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுள்ளார் இந்தியா வம்சவளியைச் சேர்ந்தவரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ். அவரின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இப்போது ஹைதராபாத், பெங்களூர், கொச்சியில் பொழுதுபோக்கு பூங்காவை வைத்திருக்கும் நிறுவனம் பெண்களுக்கு ஓர் சலுகையை அறிவித்திருக்கிறது. அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது பொழுதுபோக்கு பூங்காவுக்கு கமலா என பெயர் வைத்துக்கொண்டு வரும் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்தச் சலுகை பூங்காவில் கலமா என பெயர் இருக்கும் முதல் 100 பெண்களுக்கு மட்டும்தான், மேலும் அவர்கள் தங்கள் சரியான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com