‘தலைமைத் தளபதி’ பிபின் ராவத்துக்கு கார்டூன் மூலம் அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்!

‘தலைமைத் தளபதி’ பிபின் ராவத்துக்கு கார்டூன் மூலம் அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்!
‘தலைமைத் தளபதி’ பிபின் ராவத்துக்கு கார்டூன் மூலம் அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்!

கடந்த புதன்கிழமை அன்று குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படைகளின் முதன்மை தளபதி பிபின் ராவத்துக்கு கார்டூன் மூலம் அஞ்சலி செலுத்தி உள்ளது அமுல் நிறுவனம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை சார்ந்த பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பால் பொருட்களை உற்பத்தி செய்து வரும் அமுல் நிறுவனம், தனது ஸ்டைலில் கார்டூன் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளது. நாட்டு நடப்புகளை தனது கார்டூன் மூலம் அமுல் வெளிப்படுத்துவது வழக்கம். 

அந்த வகையில் தளபதி பிபின் ராவத் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்துள்ளது அமுல். “சக நாட்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு நண்பனாகவும், எதிரிகளுக்கு கூரான போர் வாளாகவும் இருந்தவர்” என அமுல் அந்த கார்டூனில் தெரிவித்துள்ளது. கருப்பு வெள்ளை நிறத்திலான இந்த கார்டூனில் ராணுவ உடையில் பிபின் ராவத் நடந்து வருவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com