பீட்டாவை இந்தியாவில் தடை செய்யவேண்டும்: பிரதமருக்கு அமுல் துணை தலைவர் வலியுறுத்தல்

பீட்டாவை இந்தியாவில் தடை செய்யவேண்டும்: பிரதமருக்கு அமுல் துணை தலைவர் வலியுறுத்தல்
பீட்டாவை இந்தியாவில் தடை செய்யவேண்டும்: பிரதமருக்கு அமுல் துணை தலைவர் வலியுறுத்தல்

அமுல் நிறுவனத்தின் துணை தலைவர் வலஜி ஹம்பல், பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் தடைவிதிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் பின்னணியாக, பீட்டா நிறுவனம், பால் தயாரிப்பு நிறுவனத்தை நம்பியிருக்கும் 10 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்க முயல்வதாக கூறியிருக்கிரார்.

முன்னதாக பீட்டா அமைப்பு, அமுல் நிறுவனத்தை சோயா மூலமாக வீகன் பால் தயாரிக்க சொல்லி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதைக் குறிப்பிட்டு, ‘இந்தியாவில் இயங்கும் பால் நிறுவனங்களை சதிகளால் வீழ்த்த நினைக்கும் நிறுவனங்களோடு பீட்டா போன்ற அமைப்புகளுக்கு தொடர்புள்ளது’ எனக்கூறியுள்ளார் துணை தலைவர் வலஜி ஹம்பல்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா, விலங்குகள் பாதுகாப்புக்காக இயங்கிவருகிறது. அதனொரு பகுதியாகவே, மாடுகளிடமிருந்து பால் கறக்ககூடாது  என கூறப்பட்டு, அதற்கு மாற்றாக சோயாவிலிருந்து பாலை தயாரிக்கவும் எனக் கூறியது பீட்டா. ‘பீட்டாவின் இந்த நடவடிக்கை, இந்திய பால் முகவர்களின் இமேஜை கெடுக்கும் வகையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார் அமுல் துணை தலைவர்.

இதுபற்றிய தனது அறிவிப்பில், “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பால் துறையின் பங்கு மிக முக்கியமானது. இதுபோன்றவர்களின் தவறான பரப்புரைகளால், பால் விற்பனை பாதிக்கப்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற அமைப்புகள், இந்திய பால் தயாரிப்பாளர்களின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அதை தடுக்க, குஜராத் பால் தயாரிப்பாளர்கள் அனைவர் சார்பாக இதுபோன்ற நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்துகிறோம்.

இந்திய கலாச்சாரத்தில் கால்நடைகள் அனைத்தும், குடும்பத்தின் உறுப்பினராகவே பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, அவற்றின்மீது வன்முறை அல்லது கொடுமை என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் இப்படி தவறான தகவலை பிரச்சாரம் செய்வது, இந்தியாவில் பால் தொழிலை உடைக்கும் முயற்சி.

இந்தியாவில் இப்போதுவரை பால் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பிற பொருள்களின் உற்பத்திகள் அனைத்தும், உள்நாட்டிலேயே நடக்கிறது. வெளிநாட்டிலிருந்து அவற்றை பெறும் சூழல் இல்லை. இதனால் 10 கோடி மக்கள், வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் இப்படியானவர்களின் நடவடிக்கையை பார்க்கும்போது, இவர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தூண்டுகிறதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது” எனக்கூறியுள்ளார்.

இருப்பினும் பீட்டா நிறுவனமும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. “அமுல் நிறுவனம், வீகன் உணவுமுறையை கொண்டு விற்பனைகளை செய்யவேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அதையே வலியுறுத்தினோம்.” எனக்கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com