சர்வதேச அளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இரண்டு மருத்துவக் கல்லூரிகள்

சர்வதேச அளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இரண்டு மருத்துவக் கல்லூரிகள்
சர்வதேச அளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இரண்டு மருத்துவக் கல்லூரிகள்

2022-ம் ஆண்டுக்கான உலகத் தரத்தில் சிறந்த 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில், இந்தியாவில் இருந்து 6 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் தேர்வாகியுள்ளன. உலகின் தலைசிறந்த மருத்துவ நிறுவனங்கள் குறித்து CEO WORLD என்ற இதழ் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் டெல்லி எம்ய்ஸ் உள்பட இந்தியாவின் 6 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் வேலூரில் உள்ள சிஎம்சி 46-வது இடத்திலும், மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி 60-வது இடத்திலும் உள்ளன. அதேபோல், புதுச்சேரி ஜிப்மர் 55-வது இடம்பெற்றுள்ளது. உலக தரத்தில் முதல் மருத்துவக் கல்லூரியாக அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் தேர்வாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com