உத்தராகண்ட் மழை சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அமித்ஷா

உத்தராகண்ட் மழை சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அமித்ஷா
உத்தராகண்ட் மழை சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அமித்ஷா

உத்தராகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

தொடர் கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து பாலங்களும் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருடன் ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும் சென்றனர். ஆய்வுக்குப்பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். 10க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், இரு மலையேறும் குழுக்கள் காணாமல் போன நிலையில், ஒரு குழு கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

நைனிடால், அல்மோரா, ஹல்த்வானி பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்களில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார். கன மழை தொடர்பாக உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சேதங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அமித்ஷா தெரிவித்தார். உத்தராகண்ட் மழை வெள்ளத்தில் எந்த சுற்றுலாப் பயணியும் உயிரிழக்கவில்லை என்றும், மழை வெள்ளத்தில் சிக்கிய 3,500 பேர் மீட்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தாமி, 3 நாள் மழை வெள்ளத்தால் மாநிலத்தில் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com