கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவுக் கடிதம் பெற பாஜக திட்டம்

கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவுக் கடிதம் பெற பாஜக திட்டம்

கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவுக் கடிதம் பெற பாஜக திட்டம்
Published on

பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ள இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார். சிவசேனா, அகாலி தளம், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், அசாம் கண பரிஷத், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். 

பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் எனக் கூறப்படவில்லை. கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மை கிடைத்தால், ஆட்சி அமைப்பதில் பிரச்னை ஏற்படாது. அதேநேரம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து பெரும்பான்மைக்கு குறைவான இடங்கள் கிடைத்தால், மூன்றாவது அணி அல்லது காங்கிரஸ் அணிக்கு சிலர் போகக்கூடிய சூழலை முன்கூட்டி தடுக்க பாரதிய ஜனதா கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, இன்றைய கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை பெற்றுவிட அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், தேர்தல் முடிவுகள் வந்த உடனே, ஆதரவுக் கடிதங்களை அளித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாகக் கிடைக்கும் சூழல் ஏற்பட்டாலும், தனிப்பெரும் கூட்டணி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உடனடியாக உரிமை கோர ஆதரவுக் கடிதங்கள் உதவும் என பாரதிய ஜனதா கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, இன்றிரவு நடைபெறும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை அமித் ஷா கேட்டுப் பெறுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com