“காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்” - அமித்ஷா ஆவேசம் 

“காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்” - அமித்ஷா ஆவேசம் 

“காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்” - அமித்ஷா ஆவேசம் 
Published on

காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் ஆவேசமாக தெரிவித்தார். 

கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம் தொடங்கியுள்ளது. 

மக்களவையில் ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது எனவும் ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரம் நிலுவையில் உள்ளபோது மசோதாவை கொண்டு வந்தது ஏன் எனவும் காங்கிரஸ் மக்களவைக் குழுத்தலைவர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன என்று கூட தெரியவில்லை எனவும் அனைத்து விதிகளையும் மீறி மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கிவிட்டீர்கள் என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதற்குப் பதிலளித்து பேசிய அமித்ஷா, “காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன். 370 சட்டப்பிரிவை மாற்றியமைக்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் என நான் குறிப்பிடுவது பாகிஸ்தான், சீன ஆக்கிரமைப்பையும் சேர்த்துதான். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்கத் தயார்” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com