‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு

‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு

‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு
Published on

திரைப்படத்துறையில் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திரைப்பட துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969 ஆம் ஆண்டு முதல் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு வருகிறது. சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர்(2010), சிவாஜி கணேசன்(1996) இந்த விருதினை பெற்றுள்ளார்கள். 

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னுடைய ட்விட்டரில், “திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படுகிறது. 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் பச்சனுக்கு விருது வழங்குவதால் ஒட்டுமொத்த நாடும், சர்வதேச சமூகமும் மகிழ்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com