“சாணக்யா என்று சொல்லிக்கொள்ளும் அமித்ஷா தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்டார்” - ஜெயராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது வலைதளத்தில், அமித்ஷா பற்றி கடுமையாக சாடியுள்ளார்
ஜெயராம் ரமேஷ்
ஜெயராம் ரமேஷ்புதிய தலைமுறை

தான் விரித்த வலையில் அமித்ஷா தானே சிக்கிக் கொண்டதாக காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது வலைதளத்தில், ”தன்னை சாணக்கியன் போல் காட்டிக்கொண்டு நாடகம் நடத்தி வந்த அமித்ஷாவுக்கு, தற்பொழுது ஒவ்வொரு கட்சியாக சென்றுஆதரவு கேட்டு கையேந்தும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சமயத்தில் அதிகாரத்தில் இருந்தவர், மக்களிடையே பொய்யை சொல்லி ஏமாற்றியவர், தொழில் அதிபர்களையே மிரட்டி வந்தவர் அமித்ஷா. அவர் இன்று பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக்காக கட்சிகளிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டார்” என்று தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com