\
மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு முதல் இருக்கை

மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு முதல் இருக்கை

மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு முதல் இருக்கை
Published on

பாஜக தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமித்ஷாவுக்கு மாநிலங்களவையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமித் ஷாவுக்கு, மாநிலங்களவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னர் அமர்திருந்த இருக்கை தற்போது அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதாவுடன் இணைந்துள்ளதால் அந்த உறுப்பினர்களின் ஆதரவோடு அவையில் ஆளும் தரப்புக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அதே வேளையில் சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, மாயாவதி ஆகிய 3 முக்கிய உறுப்பினர்கள் அவையில் இருக்கமாட்டார்கள் என்பதால் எதிர்க்கட்சி தரப்பு சற்று பலவீனம் அடைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com