சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!

சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
Published on

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு கூடியிருந்த தொண்டர்களைக் கண்டு காரை விட்டு கீழே இறங்கினார். சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற உள்துறை அமைச்சர், மக்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

முதல்வர், துணை முதல்வர் மற்றும் பிற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், காலை 8 மணியளவில் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரில் காரைக்காலுக்கு புறப்படும் அவர், அங்கு நடைபெறும் பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3 மணியளவில் விழுப்புரத்துக்கு வருகை தரும் அமித் ஷா, மாநில மையகுழு கூட்டத்திலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் 8 மணிக்கு மீண்டும் சென்னை வரும் உள்துறை அமைச்சர், தனி விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அமித் ஷாவின் இந்நிகழ்வுகளில், தேர்தல் பரப்புரைத் திட்டங்கள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பேசப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அமித் ஷாவின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com