தாமரைச் சின்னமுள்ள தொப்பியை அணிய மறுத்த அமித்ஷா பேத்தி - வீடியோ

தாமரைச் சின்னமுள்ள தொப்பியை அணிய மறுத்த அமித்ஷா பேத்தி - வீடியோ

தாமரைச் சின்னமுள்ள தொப்பியை அணிய மறுத்த அமித்ஷா பேத்தி - வீடியோ
Published on

அமித்ஷாவின் பேத்தி தாமரைச் சின்னம் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தொப்பியை அணிய மறுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அமித்ஷா மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளார். அமித்ஷா இன்று பேரணியாக சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். இந்த பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக வேட்புமனுதாக்கல் செய்ய அகமதாபாத் வந்த அமித்ஷாவுக்கு உறவினர்களும், தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர். அப்போது, தனது பேத்தியை தூக்கி கொஞ்சி விளையாடிய அமித்ஷா, சிறுமி ஏற்கனவே அணிந்திருந்த தொப்பியை கழற்றிவிட்டு, பாஜகவின் தாமரை சின்னம் உள்ள தொப்பியை அணிவிக்க முயற்சித்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்த அமித்ஷாவின் பேத்தி, பாஜகவின் தொப்பியை கழற்றி கொடுத்தார். ஆனால் ஏற்கனவே சிறுமி அணிந்திருந்த தொப்பியை கொடுத்தவுடன் அதை அணிந்து கொண்டார். இதுகுறித்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com