மசூதியில் தொழுகைக்கான அழைப்பு ஒலி கேட்டதும், பேச்சை நிறுத்திய அமித் ஷா!

மசூதியில் தொழுகைக்கான அழைப்பு ஒலி கேட்டதும், பேச்சை நிறுத்திய அமித் ஷா!
மசூதியில் தொழுகைக்கான அழைப்பு ஒலி கேட்டதும்,  பேச்சை நிறுத்திய அமித் ஷா!

ஜம்மு காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று ஆற்றிய உரை போது அருகில் இருந்த மசூதியில் தொழுகைக்கான ஆசான் அழைப்பு விடுக்கப்பட்டதும், மேடையில் பேசிக்கொண்டிருந்த அமித் ஷா பேச்சை நிறுத்தி அமைதி காத்தார்.

இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அமித் ஷா, பாரமுல்லாவில் உள்ள சவுதக் அலி மைதானத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 1947-ல் இருந்து ஜம்மு காஷ்மீரை பெரும்பாலும் அப்துல்லா குடும்பம், முஃப்தி குடும்பம், காந்தி - நேரு குடும்பம் எனும் 3 குடும்பங்கள் தான் ஆட்சி செய்தது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு இந்த 3 குடும்பங்கள் முக்கிய தான் காரணம். இந்த மூன்று குடும்பங்களும் ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை.


பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதுநடக்காது. நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? காஷ்மீர் மக்களிடம் தான் பேசுவோம். காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் முழுமையாக துடைத்தெறியப்படவே மத்திய அரசு விரும்புகிறது’' எனப் பேசிகொண்டிருக்கும் போது அருகிலிருந்த ஒரு மசூதியில் திடீரென ஒலிபெருக்கியில் சத்தம் கேட்டுள்ளது.

உடனே தனது பேச்சை நிறுத்திய அமித் ஷா அருகே இருந்த நிர்வாகியை அவைத்து என்ன சத்தம், மசூதியிலிருந்து சத்தம் ஒலிக்கிறேதே எனக் கேட்டார். 'மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்கள்' எனத் தெரிவித்தனர். உடனே அமித் ஷா பேச்சை நிறுத்தி அமைதி காத்தார். அதன்பின் மசூதியில் தொழுகை முடிந்துவிட்டது என்பதை உறுதி செய்தபின், மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

அமித் ஷாவின் இந்த செயலை பாஜவினர் பலர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அமித் ஷாவை பாராட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com