\
மாதுரி தீக்சித்தை சந்தித்த அமித் ஷா

மாதுரி தீக்சித்தை சந்தித்த அமித் ஷா

மாதுரி தீக்சித்தை சந்தித்த அமித் ஷா
Published on

பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்தை மும்பையில் சந்தித்தார். 

இந்தியாவில் உள்ள பிரபலங்களை சந்தித்து, மத்திய அரசுக்கு ஆதரவு திரட்டும் பணியில் பாஜகவினர் களமிறங்கியுள்ளனர். அந்த மாதுரியை சந்தித்த அமித் ஷா மத்திய அரசின் நான்காண்டு சாதனைப் பட்டியலை அளித்து, அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் போது மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் உடன் இருந்தார். 

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களை அமித் ஷா சந்தித்து வருகிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், முன்னாள் ராணுவத் தளபதி தல்பீர் சிங் உள்ளிட்டவர்களை சந்தித்துள்ள அவர், இதேபோன்று 50 முக்கிய பிரபலங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com