இந்தியா
காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுகிறார் அமித் ஷா?
காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுகிறார் அமித் ஷா?
சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அத்துடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மறுசீரமைப்பிற்கு பின் உள்துறை அமைச்சர் அங்கு செல்ல உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.