\
amit shah - cm vijay - rangasamy
amit shah - cm vijay - rangasamyani

அமித்ஷா தலைமையில் முதல்வர் மாநாடு! புறக்கணிக்கும் புதுச்சேரி முதல்வர்? - பரபரக்கும் அரசியல் களம்

ஒவ்வொரு ஆண்டும் தென் மாநில முதலமைச்சர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.
Published on
Summary

சென்னை அருகே கோவளத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென் மாநில முதல்வர் மாநாட்டில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித்தது அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

31 வது தென் மாநில முதலமைச்சர் மாநாடு இன்று சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்றிரவே அமித்ஷா மாநாடு நடக்கும் இடத்திற்கு வருகை தந்திருந்தார். மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவு பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

ரங்கசாமி - அமித் ஷா
ரங்கசாமி - அமித் ஷா Pt web

இந்த மாநாட்டுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், கேரள முதலமைச்சர் சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தந்த மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது,.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி தென்மாநில முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பனதால் அங்கு மாநில அரசை காட்டிலும் நிர்வாக ரீதியாக துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகம். இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வு அட்டவணையில் அமித்சாவுடன் முதலில் துணை நிலை ஆளுநர் பேசவுள்ளதாகவும் அதன் பிறகு புதுச்சேரி முதல்வருக்கு பேச நேரம் ஒதுக்க பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தனக்கு இரண்டாவதாகவே மரியாதை கிடைக்கும் என்பதால் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com