அத்வானியின் சாதனையை முறியடித்த அமித்ஷா !

அத்வானியின் சாதனையை முறியடித்த அமித்ஷா !
அத்வானியின் சாதனையை முறியடித்த அமித்ஷா !

பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் மூலம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில், 1991ம் ஆண்டு எல்.கே.அத்வானி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது, அமித்ஷா 26 வயது இளைஞராக இருந்தார். அப்போது, அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அத்வானியின் வெற்றிக்காக அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில், அத்வானி 57.97 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தல் வரை காந்திநகர் தொகுதியில் அத்வானி 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில் தற்போது 63வயது அனுபவம் மிக்க தலைவராக இருக்கும் அமித்ஷா இதே காந்திநகர் தொகுதியில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 925 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். மேலும் அமித்ஷா-வை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சி.ஜே.சாவ்டாவை விட 5 லட்சத்து 57 ஆயிரத்து 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியைவிட கூடுதலான வாக்குகள்‌ பெற்று புதிய சாதனையை அமித்ஷா நிகழ்த்தியுள்ளார்.ஏற்கெனவே இதே தொகுதியில் போட்டியிட்ட அத்வானி பெற்ற நான்கு லட்சத்து 83 ஆயிரம் வாக்குகளே அதிகபட்சமாக இருந்தது. இதை பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா முறியடித்துள்ளார்.

இதன் மூலம் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இருந்த இடத்தில் தற்போது அமித்ஷா இருப்பதாக பேசப்படுகிறது. அந்த வகையில் அத்வானி போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதியையும் அமித்ஷா கைப்பற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட அதே தொகுதியில் 1996இல் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com