\
ஆகஸ்ட் 11 ஆம் தேதி சென்னை வருகிறார் அமித் ஷா

ஆகஸ்ட் 11 ஆம் தேதி சென்னை வருகிறார் அமித் ஷா

ஆகஸ்ட் 11 ஆம் தேதி சென்னை வருகிறார் அமித் ஷா
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 11 ஆம் தேதி சென்னை வருகிறார். 

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. அந்தப் புத்தகத்தை வெளியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 11 ஆம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலின்போது அமித்ஷா தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்வார் என்று பாஜகவினர் பெரிதும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவர் தமிழகம் வரவில்லை. இந்நிலையில் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின்பு அமித் ஷா தமிழகம் வருகிறார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் அமித் ஷாவே முன் நின்று முழுக்க முழுக்க செயல்பட்டவர். 

தமிழகத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் அமித்ஷா தமிழகம் வருவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com