\
அமித்ஷா, ஸ்மிருதி எம்.பி.யாக பதவியேற்பு

அமித்ஷா, ஸ்மிருதி எம்.பி.யாக பதவியேற்பு

அமித்ஷா, ஸ்மிருதி எம்.பி.யாக பதவியேற்பு
Published on

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஸ்மிருதி இரானி சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இவ்விருவருக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் செய்தபிறகு, நாயுடுவின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார் இரானி. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com