உத்தர பிரதேசத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கான வாக்கு சேகரிப்பு ஓய்ந்தது!

உத்தர பிரதேசத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கான வாக்கு சேகரிப்பு ஓய்ந்தது!
உத்தர பிரதேசத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கான வாக்கு சேகரிப்பு ஓய்ந்தது!

உத்தரப்பிரதேசத்தில் நாளை கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிரபரப்புரையில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மீதம் உள்ள 54 தொகுதிகளுக்கு வரும் 7 ஆம் தேதி இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பரப்புரைக்கான இறுதி நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பேரணியாக சென்றும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் பாரதிய ஜனதாவுக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காஜிபூரில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். இதேபோல பிற கட்சி தலைவர்களும், இறுதி நாளில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர். இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com