டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை

டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை

டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை

டெல்லியில் அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 5000 வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு வந்த தொழிலாளர்கள் ஊர் திரும்ப இயலாததால் நடைபயணமாகவே ஊர் திரும்பினர். இது நாடு முழுவதும் அனைவரின் மத்தியிலும் பேசு பொருளானது.

இதனையடுத்து அவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் சில மாநிலங்கள் அவர்களுக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது. அந்த வகையில் டெல்லி அரசு அங்கு பணிபுரியும் கட்டுமான தொழிலாளார்களுக்கு 5000 ரூபாய் உதவித் தொகை அளித்தது. இதனைத் தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்களுக்கு மேலும் 5000 ரூபாய் அளிக்க டெல்லி அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் கட்டுமான தொழிலாளர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தது.

இது குறித்து தொழில்துறை அமைச்சர் கோபால் ராய் கூறும் போது “ கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மேலும் 5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 40,000 கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com