‘பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரம் என்ன?’ - ஆர்டிஐ-ல் மனு

‘பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரம் என்ன?’ - ஆர்டிஐ-ல் மனு

‘பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரம் என்ன?’ - ஆர்டிஐ-ல் மனு
Published on

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தை கேட்டு, கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்துள்ளார்.

இந்தியக் குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதலோடு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், சமீபத்தில் அந்த குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமலுக்கு வந்தது. இதனிடையே, சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தானா ? என்ற கேள்வியை எழுப்பி கேரளாவைச் சேர்ந்த ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) மனு அளித்துள்ளார். திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸ் கல்லு வீட்டில் என்பவர் சாலக்குடி நகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம் இந்த மனுவை அளித்துள்ளார். அதில், மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணம் எது? என்று ஜோஸ் கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com