\
தீ விபத்தின்போது பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்

தீ விபத்தின்போது பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்

தீ விபத்தின்போது பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்
Published on

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்ட போதும், கர்ப்பிணி ஒருவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் நேற்றிரவு தீ விபத்து நேரிட்டது. அந்த தளங்களில் இருந்த நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிர்‌களைக் காப்பாற்றும் இந்த பரபரப்பின் இடையே, இந்த பூமிக்கு புதிதாக ஒரு உயிரை மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர். 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவருக்கு, தீ விபத்து நேரிட்டிருந்த நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை கவனமாகக் கையாண்ட மருத்துவர்கள், பிரச‌வம் பார்த்தனர். அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. தீப்பற்றியதால் மருத்துவமனையே பரபரப்பாக இருந்த நேரத்தில், பதற்றமின்றி செயல்பட்டு தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com