இந்தியாவில் நிறைவடையும் நிலையில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி பரிசோதனை: அரசு

இந்தியாவில் நிறைவடையும் நிலையில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி பரிசோதனை: அரசு
இந்தியாவில் நிறைவடையும் நிலையில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி பரிசோதனை: அரசு

இந்தியாவில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் (எஸ்ஐஐ)  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவை உள்ளடக்கிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு குறைந்தது ஒரு பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

நோவாவாக்ஸ் தடுப்பூசியை மத்திய அரசு  பாராட்டியதுடன், அதன் செயல்திறன் தரவுகள் நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கிடைக்கக்கூடிய தரவுகளிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது என்னவென்றால், இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. குழந்தைகள் மீதான நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகளையும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன் " என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்தார்.

சீரம் நிறுவனம் இந்தியாவில் கிடைக்கும்  கோவிட் -19 தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டையும் உற்பத்தி செய்கிறது. ""நோவாவாக்ஸ் தடுப்பூசி 'என்விஎக்ஸ்-கோவி 2373' மிதமான மற்றும் கடுமையான நோய்களுக்கு எதிராக 100 சதவிகித பாதுகாப்பை நிரூபித்தது, ஒட்டுமொத்தமாக 90% செயல்திறன் கொண்டது" என நோவாவாக்ஸின் அறிக்கை கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com