\
மகளின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை

மகளின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை

மகளின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை
Published on: 

கர்நாடகாவில் தன் மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தராததால் இருசக்கர வாகனத்திலேயே தந்தை எடுத்து சென்ற அவலம் அரங்கேறிய‌ள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல பணமில்லாததால் தோளிலேயே கணவர் சுமந்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.

தும்கூர் மாவட்டம் வீராபுரம் கிராமத்தில் கூலித் தொழிலாளி திம்மப்பாவின் 20 வயது மகள் ரத்னம்மா மூச்சுத் திணறல் காரணமாக கோடிஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்சைப் பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு வழியின்றி தனக்கு தெரிந்தவரின் இருசக்கர வாகனத்தில் மகளின் சடலத்தை தந்தை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.