இந்தியா
அம்பேத்கரை பிராமணர் என்று அழைக்கலாம்: சபாநாயகரின் சர்ச்சை பேச்சு
அம்பேத்கரை பிராமணர் என்று அழைக்கலாம்: சபாநாயகரின் சர்ச்சை பேச்சு
அம்பேத்கர், பிரதமர் மோடி போன்றோரை பிராமணர் என்று அழைப்பதில் தவறில்லை என குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பிராமணர் தொடர்பான நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் ஆர்.திரிவேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நன்கு கற்றறிந்தவர்களை பிராமணர் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறினார். அந்த வகையில் பி.ஆர். அம்பேத்கரை பிராமணர் என்று அழைப்பதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று தெரிவித்த திரிவேதி, பிரதமர் நரேந்திர மோடியையும் பிராமணர் என்று அழைக்கலாம் என்றும் பேசினார். பா.ஜ.க. தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்குமாறு பிரதமர் சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்திய நிலையில், பிராமணர் பற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.