பியூச்சர், ரிலையன்ஸ் இடையில் ஒப்பந்தம் கூடாது - எதிர்க்கும் அமேசான்!
பியூச்சர் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் இந்தியா நிறுவனங்களுக்கு இடையேயான 3.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தத்திற்கு மும்பை பங்குச் சந்தை ஒப்புதல் அளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது அமேசான் நிறுவனம்.
இந்த ஒப்பந்தத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சொல்லி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பட்டிருந்தது. அதனையடுத்து அந்த வழக்கை விசாரித்த நடுவர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இரண்டு இந்திய நிறுவனங்களும் எந்தவித தாமதமும் இல்லாமல் இந்த ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து SEBI, தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை என மூன்றிற்கும் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் மும்பை பங்குச் சந்தை, SEBI-யின் கருத்தை கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இருப்பினும் இந்த வழக்கை பொறுத்தவரை சிங்கப்பூர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை இந்தியாவில் அமல்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். அதனால் அமேசான் இந்திய நீதிமன்றத்தில் இந்த உத்தரவை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.