மலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் ! அமேசானின் அமோகம்

மலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் ! அமேசானின் அமோகம்

மலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் ! அமேசானின் அமோகம்
Published on

தற்போது பெரிதாக வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப உலகமும் வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் ஷாப்பிங் என நாகரிக உலகம் வளர்ந்துக்கொண்டிருக்கும் சூழலில், அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் என ஏராளமான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அசத்திக்கொண்டிருக்கும் வேலையில், உலகின் மிக உயரத்தில் இருக்கும் நகரமான லே நகரில் 11,562 அடி உயரத்திலும் சென்று அமேசான் தனது பொருட்களை டெலிவர் செய்கிறது. 

லே நகரமானது உலகின் மிக பெரிய மலைகளுள் ஒன்றான இமயமலையில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த நகரமாகும். மிக உயரத்தில் இருப்பாதாலோ என்னவோ, அந்நகர் சில சமயங்களில் நவீன தொழில்நுட்பத்தை விட்டு  வெளியேறியதுபோல் தோன்றும். பனிப்பொழிவு காலங்களில் சாலைகள் பனிகளால் மூடப்பட்டுவிடும். பெரும்பாலும் ராணுவத்தில் பணியாற்றுவோரும், துறவிகளும் வசிக்கும் இவ்விடத்தில், அவர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வாசலுக்கே வந்து டெலிவர் செய்கிறது அமேசான்.

இந்த வரிசையில் 11,562 அடி உயரத்தில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த நகரமான லே-வில் அமேசான் தனது பொருட்களை பேக் செய்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் இமயமலைக்கு கொண்டுவருகிறது. பின்னர், அங்கிருக்கும் அமேசான் உள்ளூர் ஊழியர்கள் மூலம் பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கின்றது. நாட்டின் மூலை முடுக்கிலும் சென்று தங்கள் பொருட்களை கொண்டு சேர்ப்பதே நோக்கம் என்கிறது அமேசான். இதற்கு முன், போஸ்டல் சர்வீஸ் மூலம் கொரியர்களை அங்கு வசிப்பவர்கள் பெற்றுவந்தனர். மிக தாமதமாக வந்து சேருவதால் அவதிப்பட்ட லே வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

பொதுவாக ஆர்டர் செய்யும் பொருட்களை அமேசான் பிக்-சிட்டி வாடிக்கையாளர்கள் இரண்டு நாட்களில் பெறுவார்கள், அதை இங்கிருப்பவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் பெறுகின்றனர். முன் இருந்த நிலையில் மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பதை விட இது எவ்வளவோ மேலாக இருக்கிறது என்கின்றனர். மேலும், லே வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விமானம் மூலம் கொண்டு சேர்ப்பதில் பெரிய அளவில் லாபம் பார்க்கப்போவதில்லை. ஆனால், மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகர் பகுதிகளில் இருந்து லாபம் பெறும் வாய்ப்புகள் இன்னும் தொலைதூரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களை சென்று சேர உதவும் என்கிறது அமேசான்! இது குறித்து அமேசான் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எளிதில் எங்கள் பொருட்களை கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com