அமர்நாத் பனி லிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியது.
காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோவிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் ஆலோசகரான விஜய் குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஏற்கெனவே பதிவு செய்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த யாத்ரீகர்கள், பலத்த பாதுகாப்புடன் குகை கோவிலில் தரிசனம் செய்ய புறப்பட்ட நிலையில் கனமழை காரணமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாக இந்த யாத்திரைப் பயண நடைபெறாமல் இருந்தது. இப்போது மழை குறைந்த நிலையில், அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழு பனிலிங்க தரிசனத்துக்காக பயணத்தைத் தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் 3 ஆயிரம் பக்தர்களைக் கொண்ட 90 வாகனங்கள் அமர்நாத் யாத்திரையைத் தொடர்கின்றன.