இந்தியா
அமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு
அமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு
அமர்நாத் யாத்திரையின்போது நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த, ஒரு பெண் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த வாரம் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லலிதா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.