அமித்ஷாpt web
இந்தியா
“கதவு திறந்தே இருக்கும்” - அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அமித்ஷா பதில்
கூட்டணிக்கான பாஜகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், “பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் உள்ளது. இன்னும் இறுதி செய்யபடவில்லை. அந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கென தனித்த விசயங்கள் இடம் பெறும்” என்றார்.
அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமித்ஷா, “கூட்டணிக்கான பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கிறது” என்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது குறித்துப் பேசிய அமித்ஷா, “அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் வழங்க வேண்டும். பிராந்திய மொழிகள் வளர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.