‘லவ் ஜிகாத்’ என்று கூறி ஒருவர் கோடாரியால் வெட்டி தீ வைத்து எரித்து கொலை

‘லவ் ஜிகாத்’ என்று கூறி ஒருவர் கோடாரியால் வெட்டி தீ வைத்து எரித்து கொலை

‘லவ் ஜிகாத்’ என்று கூறி ஒருவர் கோடாரியால் வெட்டி தீ வைத்து எரித்து கொலை
Published on

வாலிபர் ஒருவரை கோடாரியால் கடுமையாக தாக்கி மண்ணெண்ணை ஊற்றி எரித்துவிட்டு ‘லவ் ஜிகாத்’தில் இருந்து சிறுமியை காப்பாற்ற இப்படி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் பரபரப்பான விடியோவை வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது அப்ரசூல். இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது. முகமது அப்ரசூலை ஒருவர் கோடாரியால் கடுமையாக தாக்கி பின்னர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரிந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் பகுதியில் நடத்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து கோடாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோவில் ஒருவர், முகமது அப்ரசூலை கோடாரியை கொண்டு கடுமையாக தாக்குகிறார். உடலில் பல்வேறு இடங்களில் கோடாரியால் தாக்குதல் நடத்துகிறார். தாக்குதலுக்குள்ளான முகமது அப்ரசூல் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். மீண்டும் தொடர்ந்து அந்த நபர் தாக்குகிறார். இதனை மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான முகமது அப்ரசூல் மயக்கமடைந்து கீழே விழுகிறார். பின்னர் அவர் மீது அந்த நபர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரிக்கிறார். இந்தக் கொடூர காட்சியை முழுமையாக படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர் ‘லவ் ஜிகாத்’தில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com